சவூதி அரேபியாவில் உள்ள 150 இலங்கையரை அழைத்து வர தயார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் சவூதி அரேபியாவில் பாதுகாப்பான புகலிடங்களில் சிக்கித் தவிக்கும் சுமார் 150  இலங்கையர்களை திருப்பி அழைக்க  ஏற்பாடுகள் செய்யப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார சேவையின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட 72 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளின்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்  அடுத்த இரண்டு நாட்களுக்குள் வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் தொழிலாளர்களுக்கு இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை எளிதாகப் பயன்படுத்தலாம் என ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.