நெளுக்குளத்தில் கையெழுத்துப் போராட்டம்.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உப தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் இன்று காலை 8.30 மணி முதல் 10 மணி வரையில் வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், உறுப்பினர்களான கே.தர்சினி, வீ.ஶ்ரீதரன், குகன் ஆகியோருடன் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எழுத்து மூலமான கோரிக்கையை வலுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து சர்வதேச நீதி கோரிய மேற்படி கையெழுத்துப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.