அத்துரலிய ரத்ன தேரர் செப். 12 வரை மறியலில்..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
……………..
