வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணி: இன்று ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நண்பகல் ஆரம்பித்து வைத்தார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாகும் நிலையில், முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்துள்ளார்.

மிக நீண்டகாலக் கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பிப்பதற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியை, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றார்.

தொடர்ந்து பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மற்றும் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.