எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்.
பதுளை, பல்லேகெட்டுவ பொலிஸ் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
……………………..
