சி.ஐ.டி. வசமாகும் மஹிந்தவின் வீடு – அரசு அதிரடி நடவடிக்கை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசு கவனம் செலுத்தி வருகின்றது.

அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது.

இந்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
…………..

Leave A Reply

Your email address will not be published.