ஒரே நாள் அதிரடி வேட்டையில் 5 ஆயிரத்து 896 பேர் சிக்கினர்!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை நேற்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 661 பேரும், சந்தேகத்தின் பேரில் 39 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 564 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 357 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 44 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 24 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4 ஆயிரத்து 207 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
………………

Leave A Reply

Your email address will not be published.