சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.

துணுக்காய் சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு(Online) மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது.

துணுக்காய் சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் கணணி மயப்படுத்தல் தேசிய செயற்பாட்டின் கீழ் தரவுப் பதிவேற்ற வேலைத்திட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து கணணி மயப்படுத்தப்பட்ட வங்கி சேவைகளை மக்கள் மயப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(03) பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதனூடாக வழமையான வங்கி சேவைகளை கணினி மயமாக்கல் ஊடக இலத்திரனியல் புத்தகம் வழங்கி அதனூடாக வங்கிச் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று தொடக்கம் வங்கியின் வழமையான சேவைகளை கணனி மயப்படுத்தலூடாக மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட கருத்திட்ட முகாமையாளர், மாவட்ட சமுர்த்தி உள்ளகக் கணக்காய்வாளர்கள், பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கணினி மயமாக்கப்பட்ட வங்கி புத்தகங்களை மக்களிடம் கையளித்தனர்.

கணனி மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தினை அகில இலங்கை ரீதியாக 1073 வங்கிகளில் 08வது வங்கியாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது வங்கியாக தனது சேவைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.