எட்டு மாதங்களில் 524 பெண்கள் போதைப்பொருள்களுடன் கைது!

இலங்கையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் சார் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

22 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 2 இலட்சத்து 28 ஆயிரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன. இது, 2023 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரிப்பாகும்.

2024இல் 832.3 கிலோ ஹெரோயின், 8 ஆயிரத்து 359 கிலோ கஞ்சா மற்றும் 1,364 கிலோ ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.