மோ. சைக்கிளுடன் ஓட்டோ மோதி பெண் ஒருவர் பரிதாப உயிரிழப்பு.

கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் ஓட்டோ மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும் பின்புறத்தில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஆவார்.

இதனையடுத்து ஓட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கொஸ்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.