சில நொடிகளில் அனைத்தையும் இழந்த ஒரு மனிதன் நாட்டின் தலைவனாகிறான் “ஜோ பைடன்”

இன்று, ஜோ பைடென் ஒரு அனுபவமிக்க மற்றும் முதிர்ந்த அரசியல்வாதியாக உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டை ஆளும் விளிம்பில் காணப்படுகிறார்.

ஆனால் அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் புயல் காலம் நிறைந்ததாக இருந்தது . பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாது. இன்று நீங்கள் காணும் இந்த மனிதன் வாழ்க்கையின் மிகக் குறைந்த இடத்திலிருந்து படு பாதாளத்தில் விழுந்தபின் உருவான ஒரு மனிதன்.

இது ஒரு அரசியலற்ற கதை. வாழ்க்கையைப் பற்றிய கதை.

வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இளம் ஜோ பைடன்  அரசியலில் நுழைந்தார்.

1972 இல், ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் 5 வது இளைய செனட்டரானார். டெலவயா எனும் மாநிலத்தின் செனட்டர் பதவி அவருக்கு கிடைத்தது.

ஆனால் அந்த பதவி குறைந்தது ஒரு மாதமாவது நீடிக்கவில்லை.

அவரது மனைவி நெய்லியா பைடென் மற்றும் அவர்களது ஒரே மகள், இரண்டு மகன்கள் ஆகியோரோடு அதே ஆண்டு கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு டிராக்டர்-டிரெய்லர் எங்கிருந்தோ வந்து அவர்கள் மீது மோதியது.

நெய்லியா மற்றும் அவரது ஒரு மாத மகள் நவோமி கிறிஸ்டினா பைடென் ஆகியோர் பயங்கரமான கார் விபத்தில் அதே இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

சில நிமிடங்களில், ஜோ பைடென்  எல்லாவற்றையும் இழந்த ஒரு மனிதனாக விழுந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரது இரண்டு இளம் மகன்களுடன் தனித்து போன பைடன் தன் மகன்களுக்கு தந்தையாக  வேதனையோடு வாழத் தொடங்கினார்.

அவர் தனது இரு மகன்களையும் தனது கைகளில் சுமந்துகொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

விபத்து நடந்த பின் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் அவர் யோசித்தார்.

“என் வாழ்க்கையில் முதல்முறையாக, மக்கள் நன்றாக சிந்தித்துதான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை நான் அப்போது உணர்ந்தேன்,” என்று அவர் பின்னர் ஒருமுறை பகிரங்கமாக கூறினார். மக்கள் ஏன் தற்கொலைவரை செல்கிறார்கள் என்பதை உணர்ந்ததாக சொன்னார்.

ஆனால் அவர் தனது மகன்களை அனாதையாக விட்டு விட முடியாது  என்பதால்   வாழ  வேண்டும் என முடிவு செய்தார்.

ஜோ, ஒவ்வொரு நாளும் 4 மணி நேர ரயில் பயணத்தின் போது வீட்டிற்கு செல்லும் வழியில், தனது மகன்களை தூங்க அனுப்பக்கூடிய குழந்தைகளின் கதைகளைப் படித்து ஆய்வு செய்தார். வீட்டிற்குச் சென்று குழந்தைகளைக் கட்டிப்பிடித்தார் அரவணைத்து கதைகளை சொல்லி  தாலாட்டினார்.

தினமும் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு தேவையான  காலை உணவை சமைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

“எங்களிடம் எதுவும் இல்லை என நினைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவர்கள் அவற்றை கடந்து நடக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் அமெரிக்க மக்களின் ஆவி” என்று அவர் பின்னர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் , 1977 இல், அவர் மறுமணம் செய்து கொண்டார். ஜோ 1981 இல் மற்றொரு மகளின் தந்தையானார்,  விவாகரத்து செய்திருந்த ஜில் ட்ரேசி ஜேக்கப்பை கரம் பிடித்த  பின்னர்  இரண்டு மகன்களுடன் ஒரு பெண் குழந்தை அவருக்கு கிடைத்தது.

கல்வியாளராக இருந்த அந்த அழகான பெண், பின்னர் ஜோ பைடனின் வாழ்க்கைக் கதையை சிறு குழந்தைகளுக்குப் புரியக்கூடிய  கதை புத்தகமாக மாற்றினார்.

ஆனால் இன்னொரு சோகமான விஷயம் அவருக்கு நடந்தது.

ஒபாமா நிர்வாகத்தின் துணைத் தலைவராக இருந்த காலத்தில்,  தாயின் அரவணைப்பின்றி வளர்ந்த அவரது மூத்த மகன் பியூ பைடன், 46 வது வயதில் , மூளை புற்றுநோயால் இறந்தார். பியூ ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் இராணுவ அதிகாரியாக இருந்தார், அவர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இன்னொரு பேரிழப்பாக இருந்தது.

“ஜில் மற்றும் நான் தினமும் காலையில் எழுந்தோம்.  இது ஒரு நகைச்சுவை அல்ல என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டோம். நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன், அவர் என்னைப் பற்றி பெருமிதமாக இருந்தாரா ?” ஜோ பிடென் தனது மகனின் அகால மரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டார்.

ஜோ பைடன் இத்தகைய கடினமான வாழ்க்கையை எவ்வாறு சமாளித்தார்? ஒரு சொல் அதற்கு காரணமாக அமைந்தது என்று அவர் கூறுகிறார்.

”Faith sees best in the dark” அல்லது “நம்பிக்கை இருளில் சிறந்ததைக் காண்கிறது”.

அவரது மகன் பியூவின் இழப்பு அவருக்கு வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைக் கொடுத்தது. அவர் தனது மகனைப் பற்றி பெருமைப்படுவதைப் பார்க்க விரும்பினார். அதுதான் இன்று தேவை.

“ஆரம்பமும், இன்றும் , முடிவும் குடும்பம்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

ஒபாமா ஒருமுறை கூறியது போல், “ஜோ பைடனைத் தெரிந்துகொள்வது என்பது ஏமாற்றமின்றி நேசிப்பது – சுயநலம் இல்லாமல் சேவை செய்வது, மற்றும் நிறைவான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை அறிவது.”

ஜோ பைடன் (1972) அமெரிக்காவின் 5 வது இளைய செனட்டரான போது ..

மனைவி நெய்லியாவுடன் …

கார் விபத்தில் மனைவி நெய்லியா மற்றும் ஒரு வயது மகளை இழந்தார்

விபத்தில் தப்பிய  இரண்டு குழந்தைகளை கையில்  ஏந்தி வாழ்ந்த பைடன் …

ஜோ பைடென் தனது குழந்தைகளை தூங்க வைக்கக் கூடிய கதைகளைப் படிக்க ரயில் பயணத்தில் தினமும் 4 மணி நேரம் ஒதுக்கினார். (படம்: ஜில் பைடனின் அவரது சுயசரிதை புத்தகத்திலிருந்து)

ஜோ பைடன் ஐந்து ஆண்டுகள் தனித்து குழந்தைகளோடு வாழ்ந்த பின்  ஜில் என்பவரை மணந்தார். அவர் ஒரு மகளை பெற்றெடுத்தார் . பைடனின்  வாழ்க்கை கதையை குழந்தைகளுக்கான அழகான குழந்தைகள் கதை புத்தகமாக  ஜில் கொண்டு வந்தார்.

  ஜோ பைடனும் ஜில் பைடனுடன் இன்று ..

பராக் ஒபாமாவுடனான பைடனின்  நட்பு பல தசாப்தங்களாக நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் இணைப்பாகும்.

2017 ஆம் ஆண்டில், ஒபாமா சுதந்திர பதக்கத்தை ஜோ பிடனுக்கு வழங்கினார்.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் சரித்திரம் படைக்கும் போது  ஒபாமா ஜோவுடன் இருக்கிறார்.

 

  • ரதீகாவின் ஆக்கம் தமிழில் ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.