யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித நியமனம்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி. பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பாலித செனவிரட்ன யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
