காணாமல்போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

கிணற்றிலிருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கலவானை, வெத்தாகல பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்தே வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலவானை, வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி வயோதிபர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் வயோதிபரின் உறவினர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போது கிணற்றிலிருந்து சடலத்தைக் கண்டுபிடித்த நிலையில் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்க அனுப்பி வைத்துள்ளனர்.

வயோதிபர் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.