சட்டத்தரணி மீது தாக்குதல்: கான்ஸ்டபிளுக்கு மறியல்!
கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தினார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவர், கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, மீண்டும் வீடு நோக்கிச் செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது காரைச் செலுத்த முன்றுள்ளார்.
இதன்போது சிறைச்சாலை பஸ் ஒன்று நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், பஸ்ஸை நிறுத்துவதற்காகக் காரை அங்கிருந்து எடுக்குமாறு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சட்டத்தரணியிடம் கூறியுள்ளார்.
இதனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
