செவ்வந்தியை அழைத்து வர நேபாளம் சென்றது எஸ்.ரி.எவ்.

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் சென்றுள்ளனர் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

நேபாள அரசின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாள்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய் உட்பட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இருவர் இன்று புதன்கிழமை நேபாளத்துக்குச் சென்றுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.