பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்கு பயணம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஹரிணி இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார்.

அவர் தனது விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

நாளை என்.டி.ரி.வி மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் என்.டி.ரி.வி உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.