முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத மாநிலங்களில் பைடன் மெதுவாக முன்னேறி வருகிறார்

அமெரிக்கத் தேர்தல் களம் 2020 : சமீபத்திய அறிக்கைகளின்படி, அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தற்போது கணக்கிடப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் ஜோ பைடனின் ஸ்திரத்தன்மை மெதுவான முன்னேற்த்தை நோக்கி நகர்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பைடனுக்கும் டிரம்பிற்கும் இடையிலான விருப்பு வாக்குகளால் அவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைந்ததே இதற்குக் காரணமாகும்.

தேர்தல் கல்லூரியில் (Electoral College ) அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான 270 வாக்குகளில் 264 வாக்குகளை பைடன் இப்போது பெற்றுள்ளார், டிரம்ப் 214 வாக்குகளைப் பெற்று வெகு நேரமாக முன்னேறாத நிலையில் காணப்படுகிறார்.

 

இந்த 264-214 முடிவுக்கு பின் எந்தவொரு மாநிலத்திலும் இறுதி முடிவுகள் வெளியிடப்படாததால், கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. ஏனென்றால், மீதமுள்ள மாநிலங்களில் வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த முக்கியமான மாநிலங்கள் ஜார்ஜியா, பென்சில்வேனியா, வட கரோலினா, நெவாடா மற்றும் அலாஸ்கா ஆகியனவாகும்.

இவற்றில், நெவாடா மாநிலத்தில் பைடென் முன்னிலையிலும் , ஏனைய நான்கு மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு, சில மாநிலங்களில் டிரம்ப் 500,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்திருந்தார், ஆனால் இப்போது அது சுமார் 75,000 ஆகக் குறைந்துள்ளது.

பென்சில்வேனியாவிற்கும் ஜார்ஜியாவிற்கும் இடையிலான இடைவெளியை ஜோ பைடென் குறைப்பது முக்கியமானது, ஏனென்றால் இந்த ‘போர்க்களங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றில் குறைவான ஏழு வாக்குகளைப் பெற முடிந்தால், அவர் எனைய மாநிலங்களின் முடிவுகள் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார்.

ஜார்ஜியாவின் இறுதித் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், எண்ணுவதற்குரிய வாக்குகள் தற்போது 1% மட்டுமே மீதமுள்ளது.

அதாவது, இந்த மாநிலங்களில் ஜோ பைடனுக்கும் டிரம்பிற்கும் இடையிலான இடைவெளி மெதுவாகக் குறைந்து வருகிறது.

The Guardian படி, தற்போதைய நிலைமை பின்வருமாறு உள்ளன:

Leave A Reply

Your email address will not be published.