பருத்தித்துறை மரக்கறிச் சந்தையைப் பார்வையிட்டு வியாபாரிகளுடன் கலந்தாலோசனை நடத்திய எம்.பி.
பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த சந்தைப் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட்டார்.

இதன்போது வியாபாரிகள் சிலர், நாடாளுமன்ற உறுப்பினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். சந்தைக்கு உரிய தீர்வில்லையேல் தீக்குளிப்போம் என வியாபாரி ஒருவர் சத்தமிட்டார்.

நிலைமைகளை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார்.