கம்பஹாவில் உடல் முழுவதும் மிளகாய்ப் பொடி தடவப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

வயோதிபப் பெண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, மினுவாங்கொடை – யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொட, யட்டியன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வயோதிபப் பெண்ணின் உடல் முழுவதிலும் மிளகாய்ப் பொடி தடவப்பட்டிருந்தது எனவும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த விதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.