17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை! – 22 ஆயிரத்து 620 பேர் பாதிப்பு.

நுவரெலியா, கண்டி, பதுளை, குருநாகல், காலி உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 579 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 697 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.