உலக நாயகன் கமலஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

தமிழ் சினிமாவின் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமலஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமா எத்தனையோ நடிகர்களை கடந்து வந்திருக்கிறது. ஆனால் கமலஹாசன் ஒரு முழுமையான கலைஞன். நடிப்பு, எழுத்து, இயக்கம் நடனம், இசை என எல்லாத்துறையிலும் கற்றுத்தேர்ந்த கமலஹாசன் தமிழ் சினிமாவின் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறார்.

66 ஆண்டு கால வாழ்க்கையில் 60 ஆண்டுகளை கலைக்காகவே அர்ப்பணித்து கலைச்சேவை ஆற்றி வரும் கமலஹாசன் 3 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியர் விருது என வேறு எந்த நடிகராலும் நெருங்க முடியாத அங்கீகாரங்களோடு உயர்ந்து நிற்கிறார்.

1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அந்த திரைப்படத்திற்காக கமலஹாசனுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது தேடி வந்தது.

முதல் படத்தை விருதுடன் துவங்கிய கமலஹாசன் ஒவ்வொரு திரைப்படத்தையும் அங்கீகாரத்துடனே நிறைவு செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது உழைப்பை கொட்டி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.