இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு! – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..

இரத்தினபுரி, கலவான பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.