மாவீரரை நினைவேந்த தமிழருக்கு முழுச் சுதந்திரம் உண்டு; துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினர் வெளியேறுவர்.

“மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.”

இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளைத் தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பாதுகாப்புச் செயலருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.