இந்த வருடம் இதுவரை 105 துப்பாக்கிச்சூடுகள் – 57 பேர் உயிரிழப்பு.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 105 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 57 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 56 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பலரைக் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.