துபாய் விமானக் கண்காட்சியில் அதிர்ச்சி: சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

துபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று(நவ. 21) கண்காட்சியின்போது சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் உள்ளிருந்த விமானியின் நிலை பற்றி இன்னும் தெரியவில்லை. அவர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2 நாள்களாக கண்காட்சியில் தேஜஸ் விமானம் இடம்பெறவில்லை என்று. கூறப்படுகிறது. இன்றைய அட்டவணையில் தேஜஸ் விமானம் 3 ஆவதாக இடம்பெற்றிருந்தது.

தேஜஸ் விமானத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்திய விமானப்படை இந்த விபத்தை உறுதி செய்துள்ளது.

இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் மிகவும் இலகுரக போர் விமானம். 2015 ஆம் ஆண்டு முதல் இது விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.