யாழில் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை புன்னாலைக்கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்குச் சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மேற்படி குடும்பஸ்தரைத் தாறுமாறாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
