கோவை கொள்ளை: தப்ப முயன்ற 3 வடமாநில கொள்ளையர்களை போலீஸார் ‘சுட்டுப் பிடித்தனர்’!

கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

கோவை. கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் பட்டப்பகலில் கதவை உடைத்து 56 சவரன் தங்க நகைகள்,

3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். குறிப்பாக நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 சவரன் தங்க நகைகள் திருடுபோனது விசாரணையில் தெரியவந்தது.

பின் திருட்டு நடந்த வீடுகளில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் குனியமுத்தூர் குளத்துபாளையத்தில் பதுங்கி இருந்த 3 பேரை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். 3 பேரும் தப்பியோட முயன்ற நிலையில், அவர்களை சுட்டுப்பிடித்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிப் (48), இர்பான் (45), கல்லு எ கலீல் (60) என்பதும், மூவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.