உத்தரப்பிரதேசம் குஷிநகரில் பெரும் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மர்மக் காய்ச்சலுக்கு பலி; அதிகாரிகள் தீவிர விசாரணை!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் அடுத்தடுத்து மர்மக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து விசாரணை ஒன்றை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.

அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் மர்ம மரணம்
உத்தரப்பிரதேசத்திலுள்ள குஷிநகர் என்னுமிடத்தில் வாழும் பின்டு கௌர் என்பவரின் மகளான மஞ்சுவுக்கு ஒரு வாரம் முன்பு காய்ச்சல் வந்துள்ளது.

உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் பிள்ளையைக் கொண்டு சென்ற நிலையில், அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கவே, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாள் மஞ்சு.

ஆனால், புதன்கிழமையன்று அவள் உயிரிழந்துவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து மஞ்சுவின் தங்கையான குஷிக்கு காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவக்கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவளும் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துவிட்டாள்.

அதைத் தொடர்ந்து கௌரின் அண்ணனான தஷ்ரத்தின் மகனான கிருஷ்ணாவுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த சிறுவனும் உயிரிழந்துள்ளான்.

இப்படி 48 மணி நேரத்துக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை துவக்கியுள்ளார்கள்.

இந்த மரணங்கள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அந்த பிள்ளைகளின் கிராமமான Nebua Naurangia என்னும் கிராமத்துக்குச் சென்றுள்ள மருத்துவர்கள் குழு ஒன்று, அங்குள்ள பிள்ளைகளுக்கு டெங்கு, மலேரியா பரிசோதனைகளைச் செய்துவருகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த பிள்ளைகளை பலிவாங்கிய காய்ச்சல் என்ன என்பது மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்பதால் பிள்ளைகளின் மரணத்துக்கான காரணம் தற்போதைக்கு மர்மமாகவே நீடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.