இயற்கையின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு.

இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 214 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்றும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் 5 இலட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 43 ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 537 பேர் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.