சுனாமியை விட டித்வா புயலால் 3 மடங்கு இழப்பு – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு.
டித்வா புயலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் கிட்டத்தட்ட 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. பொருளாதார மீட்புத் திட்டத்தை வகுக்க சரியான பேரிடர் மதிப்பீடு பின்னர் மேற்கொள்ளப்படும்.
2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட பொருளாதார சேதம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மட்டுமேயாகும்.
ஆனால், இது சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம்.” – என்றார்.
