ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அடியோடு மறுக்கின்றது அநுர அரசு.
“இலங்கையில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எமது அரசு செயற்படவில்லை.”
இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புகின்றன. இவற்றுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
போலியான செய்திகளால் நாட்டின் சுகாதாரம்மீதான நம்பிக்கை சீர்குலையக்கூடும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
எனவே, இப்படியான செயலுக்கு எதிராக சாதாரண சட்டத்தைச் செயற்படுத்துவது அடக்குமுறை அல்ல.” – என்றார்.
