கொழும்பு மாநகர சபையின் ‘பட்ஜட்’ டிச. 31ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிப்பு.

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகர சபையின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு என கருதப்படுகின்றது.

இந்நிலையிலேயே சில திருத்தங்களுடன் வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக 31 ஆம் திகதி முன்வைக்கப்படுகின்றது.

வாக்கெடுப்பின்போது வரவு- செலவுத் திட்டம் நிறைவேறும் எனவும், எதிரணி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள் எனவும் கொழும்பு மேயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.