சட்டவிரோத மணல் அகழ்வு: தருமபுரத்தில் ஐவர் சிக்கினர்.

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு அனுமதி பெற்றுள்ளதுடன், அந்த அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டனர் என்று தருமபுரம் பொலிஸார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், மணல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து டிப்பர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.