டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழு உறுப்பினரான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே டக்ளஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.