கொழும்பில் துப்பாக்கிச்சூடு! 16 வயது சிறுமி படுகாயம்!!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்குவைத்து நேற்று இரவு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.