பருத்தித்துறையில் கைக்குண்டு மீட்பு!

பருத்தித்துறை, கொட்டடி மீன்சந்தைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரை வான் அகழ்வின்போது வெளிப்பட்ட மணல், கொட்டடி மீன்சந்தைப் பகுதியில் வீதியோரமாக அண்மையில் கொட்டப்பட்டிருந்தது. அதற்குள் இருந்தே இந்தக் கைக்குண்டு நேற்று அவதானிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு மீனவர்கள் தகவல் வழங்கினர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக நடவடிக்கையின் அடிப்படையில், அந்தக் கைக்குண்டு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு, மணற்காட்டுப் பகுதியில் வைத்து பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.