யாழில் வாள், போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு வாள், 4 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
