சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகின்றார் – உறுதிப்படுத்தியது அரசு.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நாளை (11) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.

நாளைமறுதினம் திங்கட்கிழமை சீன வெளிவிவகார அமைச்சர் தன்னைச் சந்தித்து பேச்சு நடத்துவார் என்றும் அவர் கூறினார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே இலங்கை வருவார் என முன்னதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையிலேயே சரியான திகதி விவரத்தை வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் சீன வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.