கல்வி அமைச்சருக்கு எதிரான பிரேரணை: பொதுமக்களிடம் கையொப்பம் திரட்டல்!
கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி விலக வேண்டும் என்றும், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
