கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஐவர் பலி.
இன்று பிற்பகல் 4:00 மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த 5 பேரில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரும் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரும் விசுவமடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
