2 ஆயிரத்து 400 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை சிக்கினார்!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரத்து 400 சிகரெட்டுகளுடன் வெளிநட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையப் பொலிஸ் அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 56 வயதுடைய இந்தியர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.