சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!
இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று காலமானார்.
இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அவரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9 மணி முதல் தெஹிவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றன.
சர்வதேச ஊடகங்களிலும் இக்பால் அத்தாஸ் பணியாற்றியுள்ளார். இலங்கையில் பாதுகாப்புத் துறை செய்திகள், புலனாய்வுச் செய்திகள் என்பவற்றை துணிந்து எழுதக்கூடிய துணிக்கச்மிக்க ஊடகவியலாளராக இவர் செயற்பட்டுள்ளார்.
