நீர்வேலியில் வாகனம் விபத்து! – அதில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் இல்லை
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி பஸ் தரிப்பு நிலையத்தையும் மோதித்தள்ளி முற்றாகச் சேதமாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக் கொண்டிருந்த இந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோயில் சந்திப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருப்பினும் இந்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இன்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




