பிரதமர் விலகும் வரை போராட்டம் தொடரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. திட்டவட்டம்.

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலகும் வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். பிரதமர் கல்வி அமைச்சில் இருந்து விலகும் வரை எமது போராட்டம் தொடரும்.” – என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.