‘சங்கு’ கூட்டணியின் அரசியல் கூட்டத்தை புறக்கணித்த செல்வம்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டணி) கூட்டத்தை அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. புறக்கணித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் நேற்றுக் காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதில் அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் தலைவரும் அக் கூட்டணியின் ஒரேயொ ரு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, அவரது கட்சி சார்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் ரெலோவின் சார்பில் பெண் ஒருவர் மாத்திரமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல், புதிய அரசமைப்பு, கட்சியின் மாநாடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.