கனடா செல்ல முன் தூதுவருடன் ஹக்கீம் பேச்சு!
சில தினங்களில் கனடா செல்லவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து பரஸ்பரம் ஆர்வமுள்ள இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் குவென் டெமெலும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
