நாடெங்கும் வைத்தியர்கள் நாளை போராட்டம்! – சுகாதாரத்துறை முடங்கும் அபாயம்.

நாடு தழுவிய ரீதியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும், சிறார் வைத்தியசாலைகள், புற்றுநோயாளர் வைத்தியசாலைகளில் இந்தப் போராட்டம் இடம்பெறாது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.