ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு!
யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஆழியவளைப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைக்குண்டைக் கண்டதும் அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்து கைக்குண்டைப் பார்வையிட்ட மருதங்கேணி பொலிஸார், அதைப் பாதுகாப்பாக அகற்றினர்.
