ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பங்கேற்பு!
ஆஸ்திரேலிய தினக் கொண்டாட நிகழ்வு, கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் அன்னாரின் பாரியார் ஆகியோரின் கௌரவ அழைப்பை ஏற்றே அவர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் இங்கு கூடியிருந்தனர்.


