பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஷிராந்தி இன்று முன்னிலையாகவில்லை! – இரு வாரங்கள் கால அவகாசம் கோரினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்குக் கால அவகாசம் கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது எனப் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஷிராந்தி ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இரண்டு வாரங்கள் கால அவகாசமும் அவர் கோரியுள்ளார்.
